‘ஹரக்கடா’ பின்புலத்தில் போதைப் பொருள் கடத்தல்

தெற்கு கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட 3,300 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகை இன்று (2/01) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

டுபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் “ஹரக்கடா” என்பவரால் குறித்த ஹெரோயின் தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த போதைப்பொருள் கடத்தலுக்கு மேலும் மூவரின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

330 கிலோ கிராமுக்கும் அதிக ஹெரோயின் தொகையுடன் பயணித்த 2 படகுகளை தெற்கு கடற்பிராந்தியத்தின் சர்வதேச கடல் எல்லைக்கருகில் நேற்று முன்தினம் (24/01) கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

அந்த படகுகளிலிருந்த 11 பேரும் கைது செய்யப்பட்டனர்.மாத்தறை – குடாவெல்ல பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்றிருந்த மீனவ படகுகளே இவ்வாறு போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே டுபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் “ஹரக்கடா” என்பவர் பற்றிய விடயங்கள் வெளிவந்துள்ளன.

‘ஹரக்கடா' பின்புலத்தில் போதைப் பொருள் கடத்தல்

Social Share

Leave a Reply