மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர் – வவுனியாவில் சம்பவம்!

வவுனியாவில் ஆசிரியையான மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் கணவர் சரணடைந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்யப்படும்போது குறித்த பெண் கர்ப்பமாக இருந்தாக என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (03.06) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன் மனைவியை கொலைசெய்து நயினாமடு பகுதியில் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கணவன்- மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு நிலவி வந்துள்ளது. இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி மனைவியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவன் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.

 

Social Share

Leave a Reply