தற்போது போதுமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதன் காரணமாக 27ஆம் திகதி வரை மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதிக்குப் பின்னர் எரிபொருள் விநியோகத்தின் இருப்பைப் பொறுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையை ஆராயவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
