மட்டக்களப்புக்கு அதிவேக சொகுசு புகையிரதம்

மட்டக்களப்பிலிருந்து, கொழும்புக்கான அதிவேக சொகுசு புகையிரதம்,இம்மாதம் 28 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது. பாராளுமன்றத்தில்,பாராளுமன்ற உறுப்பினர் இரசாமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு முதல் பொலநறுவை வரை இடம்பெற்று வரும் “புலதுசி” அதிவேக சொகுசு புகையிரத சேவையே மட்டக்களப்பு வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற விவாதத்தின் போது சாணக்கியன் MP, “பொலநறுவை வரை செல்லும் புகையிரத்தை மட்டக்களப்பு வரை விஸ்தரித்தால் மக்கள் பயனடைவார்கள். குறைந்தளவு பயணிகளோடு பயணிக்கும் இந்த இரயில் சேவையினை மட்டகளப்பு வரை நீடித்தால் புகையிரத திணைக்களத்துக்கும் வருமானம் அதிகரிக்கும்” என்பதனை சுட்டி காட்டியிருந்தார்.

அந்த கருத்தினை ஏற்றுக்கொண்ட போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, உடனடியாக அதற்கான நடவடிக்கையினை எடுத்ததன் காரணமாக புலதசி மட்டக்களப்பு வரை செல்லவுள்ளது.

மட்டக்களப்புக்கு அதிவேக சொகுசு புகையிரதம்

Social Share

Leave a Reply