பாடசாலை மட்ட ரீதியில் கிரிக்கெட் ஊக்குவிப்பு திட்டம்

பாடசாலை கிரிக்கெட்டை மேம்படுத்தும் முயற்சியில் நாடு முழுவதும் உள்ள 650 பாடசாலைகளுக்கு கிரிக்கட் உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் வேலைத் திட்டத்தை இலங்கை கிரிக்கெட் நேற்று (28/01) ஆரம்பித்து வைத்தது.

இத்திட்டத்தின் கீழ், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடாத்தும் 13 மற்றும் 15 வயதுக்குட்பட்ட போட்டிகளில் விளையாடும் பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இது தவிர, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடாத்தும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 50 பள்ளிகளுக்கும் கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பாடசாலை மற்றும் தேசிய மட்டத்தில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் திரு.ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆற்றிய பணிகளுக்காக பாராட்டு தெரிவித்தார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நாட்டிலுள்ள ஏனைய பாடசாலைகளுக்கும் கிரிக்கெட் உபகரணங்களை விநியோகிக்க இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கிரிக்கெட் உபகரணங்களை நன்கொடையாக வழங்குவதோடு, பாடசாலைகளுக்கு இடையில் கிரிக்கெட் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தனது வேலைத்திட்டத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலை மட்ட ரீதியில் கிரிக்கெட் ஊக்குவிப்பு திட்டம்
பாடசாலை மட்ட ரீதியில் கிரிக்கெட் ஊக்குவிப்பு திட்டம்
பாடசாலை மட்ட ரீதியில் கிரிக்கெட் ஊக்குவிப்பு திட்டம்

Social Share

Leave a Reply