இலங்கையை சேர்ந்த தந்தை ஒருவர் அவுஸ்திரேலியவில் தனது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செத்துக்கொண்டுள்ளார்.
வீட்டின் கார் தரிப்பிடத்தில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நான்கு வயது பெண் பிள்ளை, 6 வயது ஆண் பிள்ளை மற்றும் 40 வயதான இந்திக குணதிலக ஆகியோரே இவ்வாறு இறந்துள்ளனர்.
குடும்ப பிரச்சினையே இந்த சம்பவத்துக்கு காரணம் என நம்பப்படுகிறது.கடந்த வெள்ளிக்கிழமை குழந்தைகளின் தாயாருடன் சந்திப்பு இருந்த போதும் அவர்கள் அந்த சந்திப்பு செல்லாதமையினால் சந்தேகம் ஏற்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை முக புத்தகத்தில் இந்திக்க குணதிலக சூரியன் மறையும் வேளையில் பிள்ளைகளின் பின்புற புகைப்படத்தை வெளியிட்டு மறைதல் என்பதன் அர்த்தத்தோடு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்விகற்றுள்ள இவர், அவுஸ்திரேலியவில் சொந்தமாக தொழில் செய்துவரும் ஒருவர். அத்தோடு இவர் ஒரு பாடகர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நத்தார் தினத்தன்று “தான் மன அழுத்தத்தினால் மிகவும் கஷ்டப்படுவதாகவும், தற்கொலை செய்பவர்கள் வாழ்க்கையை முடிப்பதற்காக மட்டும் தற்கொலை செய்வதில்லை. தங்கள் தாங்க முடியா வலியை முடித்து கொள்ளவே தற்கொலை செய்கிறார்கள்” என்ற கருத்துக்கள் அடங்கிய வீடியோ பதிவினையும் இட்டுள்ளார்.


