தேவை ஏற்படின் தனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான யோசனை இன்று (31/01) அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
IOC நிறுவனத்திடம் இருந்தும் மின்சார சபைக்கு நேரடியாக டீசல் மற்றும் எண்ணெய் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் IOC யிடம் இருந்து எண்ணெய்யைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கமைய துண்டிப்பின்றி மின்சார விநியோகத்தை முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே மேலும் தெரிவித்துள்ளார்.
