கடந்த வருடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட பயணமாக திருப்பதி ஆலயத்துக்கு சென்றிருந்தார் தனியார் ஜெட் ரக விமானத்திலேயே அந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார். பிரதமரின் அலுவலக தலைமையதிகாரி யோசித்த ராஜபக்ஷ பிரதமரின் தனிப்பட்ட நண்பர் ஒருவர் ஜெட் விமான பயணத்தை பரிசாக வழங்கியதாக தெரிவித்திருந்தார்.
வழங்கப்பட்ட அந்த பரிசு இலஞ்சமாக பெறப்பட்டதாக ஊடகவியலாளர் தரிந்து உடுவாகெதர இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடம் வழங்கிய விசாரணையின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, முறைப்பாடு செய்த ஊடகவியலாருக்கு ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் 23 ஆம் திகதி பிரதமர் திருப்பதி ஆலயத்திற்க்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். டிசம்பர் 31 ஆம் திகதி குறித்த பயணம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
