ஜேர்மனி பெண்கள் இலங்கையில் துஸ்பிரயோகம்

ஜேர்மனி நாட்டை சேர்ந்த இரு பெண்கள் கொழும்பிலும், தங்காலையிலும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு கொள்ளுப்பிட்டி கடற்க்கரை வீதியிலுள்ள தனியார் விடுதியில் வைத்து 32 வயதான பெண், அவரது ஆண் நண்பரினால் போதை வழங்கப்பட்டு தன்னை துஸ்பிரயோகம் செய்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சந்தேகநபரான ஆண் விடுதிக்கு செல்வதற்கு முன்னர் மதுபான விருந்தகம் ஒன்றில் மது அருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கண்டியை சேர்ந்த சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தங்காலையில், சுற்றுலா வழிகாட்டி ஒருவர், ஜேர்மனி பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். குறித்த பெண்ணுடன் விடுதியில் தங்கிய நபரே அவரை வன்புணர்வு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுளளதாகவும், பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரவளை, எல்லை பகுதியினை சேர்ந்த சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனி பெண்கள் இலங்கையில் துஸ்பிரயோகம்

Social Share

Leave a Reply