அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற கிக் பொக்ஸிங் குத்துச்சண்டை போட்டித் தொடரில் 25 வயதுக்குட்பட்ட 55 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டு, தங்கப் பதக்கம் வென்ற முல்லைத்தீவை சேர்ந்த இந்துகாதேவி கணேஸ் இன்று(08.02) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளர் லக்சயன் முத்துக்குமாரசாமியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ஐக்கிய மக்கள் சகதியில் பெண் தலைவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவின் புதிய நகரில் பிறந்து உறுதி,அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் பயணத்தின் விளைவாக பாராட்டத்தகு பெறுபேற்றினை பிறந்த தாய்நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்தமைக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் எதிர்க் கட்சித் தலைவர, சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது வீராங்கனை இந்துகாதேவிக்கு சஜித் பிரேமதாச நிதியுதவியையும் இ வழங்கி வைத்தார்.




