ஆஸியை தடுமாற வைத்த இலங்கை

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இரண்டாவது 20-20 போட்டி சமநிலையில் நிறைவடைந்ததனை தொடர்ந்து சுப்பர் ஓவரில் போட்டி நிறைவுக்கு வந்தது.

இன்று (13/2) சிட்னியில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜோஷ் இங்கிலீஸ் 48 ஓட்டங்களையும், ஆரோன் பிஞ்ச் 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் துஷ்மந்த சமீர, வனிது ஹசரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும், நுவான் துஷார, மகேஷ் தீக்ஷண ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

165 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது. இதில் பத்தும் நிசங்க 73 ஓட்டங்களையும், தசுன் ஷானக 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜோஷ் ஹசெல்வுட் 3 விக்கெட்களையும், பட் கமின்ஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், கேன் ரிச்சர்ட்சன், அடம் சம்பா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 6 பந்துகளில் 5 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 3 பந்துகளில் 9 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் நாயகனாக ஜோஷ் ஹசெல்வுட் தெரிவு செய்யப்பட்டார்.

நாளை மறுதினம் (15/2) மூன்றாவது 20-20 போட்டி மதியம் 1:40 இற்கு நடைபெறும்.

ஆஸியை தடுமாற வைத்த இலங்கை

Social Share

Leave a Reply