மழையுடனான வாநிலை நாளையும் தொடருமென வாநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மழை அல்லது இடியுடன் கூடிய மழை நாளைய தினம் வடக்கு, வட மத்திய , கிழக்கு மாகாணங்களில்
பெய்யக்கூடுமென தெரிவித்துள்ள வாநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ள அதேவேளை, ஊவா மாகாணத்திலும், நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் கடும் மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளதாக வாநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
75 mm இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி அல்லது அதற்கு அதிகமாக மேலுள்ள இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணம், சப்ரகமுவ, வட மேல் மாகாணங்களிலும், கண்டி காலி, மாத்தறை ஆகிய இடங்களில் மாலை அல்லது வேளையில் மழை வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதேசங்களை சேர்ந்த மக்களை மழைக்கான தயார் படுத்தல்களை செய்து கொள்ளுமாறும், அவதானமாக இருக்குமாறும் வாநிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மழை பெய்யும் நேரங்களிலும், மழைக்கு பின்னரான நேரங்களிலும் வீதி போக்குவரத்துக்கள் அவதானமாக ஈடுபடுங்கள்.குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் அவதானமாக செயற்படவும். விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க வீதிகளில் அவதானமாக செயற்படுங்கள்.