இந்தியா டெஸ்ட் அணியின் தலைவராக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கை, இந்தியா டெஸ்ட் தொடருக்கான இந்தியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரோஹித் ஷர்மா அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இறுதியாக நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரோடு விராத் கோலி இந்தியா அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருந்தார். ரோஹித் ஷர்மா டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்படுவார் என எதிபார்க்கபப்ட்ட போதும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்காக அனைவரும் காத்திருந்தனர்.
ஜஸ்பிரிட்பும்ரா அணியின் உபதலைவராக நியமிக்கபப்ட்டுள்ளார்.
இந்தியா அணியிலிருந்து முக்கிய நான்கு டெஸ்ட்வீரர்கள் அணியிலிருந்து நீக்கபப்ட்டுள்ளார்கள்.செட்டெஸ்வர் புஜாரா,அஜிங்கையா ரெஹானே, இஷாந்த் ஷர்மா, ரிதிமன் சஹா ஆகியோர் நீக்கப்பட்டு ரஞ்சி கிண்ண போட்டிகளில் மீண்டும் தங்களது திறமைகளை நிரூபித்து காட்டி அணிக்குள் இடம் பிடிக்குமாறு தெரிவுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்தியா அணியிலிருந்து வெளியேறினால் மீணடும் அணிக்குள் வருவது மிகப் பெரிய போராட்டமே. இந்த நிலையில் இந்த வீரர்கள் மீண்டும் அணிக்குள் வருவது இலகுவானதல்ல. ஆனால் அஜிங்கையா ரெஹானே விளையாடிய முதற் போட்டியிலேயே சதம் அடித்துள்ளார். ஆனாலும் இந்த தொடருக்கு இந்த நான்கு வீரர்களும் சேர்க்கப்படமாட்டார்கள் என தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
இவர்களது இடங்களுக்கு புதிய வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
உபாதையிலிருந்து மீண்டுள்ள ரவீந்தர் ஜடேஜா மீண்டும் அணிக்குள் இடம் பிடித்துள்ளார். ரவிச்சந்திரன் அஷ்வின் உபாதையிலுருந்து குணமடைந்துள்ள போதும் முழுமையான உடற் தகுதியினை பெற்றால் மட்டுமே விளையாட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்ஷர் பட்டேல் உபாதையிலிருந்து குணமடையாத நிலையில், அணிக்குயில் இணைக்கப்படவில்லை.
அணி விபரம்
ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ரிஷப் பந்த், கே.எஸ்.பாரத், ஆர்.அஷ்வின் , ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ். குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், சவுரப் குமார்.