இலங்கையில் கொவிட் தொற்றை தடுக்கும் முகமாக அமுல் செய்யப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிப்பு செய்யப்படுகிறது. அதன்படி ஒக்டோபர் 01 ம் திகதி வரை அதிகாலை 4 மணிவரை இந்த ஊரடங்கு நீடிப்பு அமுல் செய்யப்படுகிறது.
ஏற்கனவே 21 ஆம் திகதியோடு நாடு திறக்கப்படும் வாய்புகள் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று இலங்கையில் வீழ்ச்சி அடைந்து வருவதும், மீண்டும் திறக்கப்பட்டால் அதிகரிக்கும் நிலை ஏற்படும் என்ற காரணத்தினாலும் மேலும் ஊரடங்கினை நீடிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற கொவிட் செயலணி கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீடிப்பினை அரசாங்கம் செய்து கொண்டுள்ளது. ஆனால் மக்களும், வியாபாரிகளும் தங்கள் அன்றாட செயற்பாடுகளை செய்து வருகின்றனர். இதுவே கொரோனா பாதிப்பு குறைவடையாமல் இருக்க காரணமாக இருக்கிறது.
மக்களை கட்டுப்படுத்துவதில் அக்கறை காட்ட வேண்டிய அரா உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்காமையே இதற்கு முக்கியமான காரணம்.