டெங்கு, சிக்குன்குன்யா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் ஆகிய தொற்றுகள் இலங்கையில் பரவும் அபாயங்கள் தொடர்பில் சுகாதாரப் பிரிவு தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பல நாடுகளில் கொவிட் தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், இலங்கையிலும் இந்த வைரஸ் வகை கண்டறியப்பட்டுள்ளது,
இந்நிலைமை தொடர்பில் முன்னெச்சரிக்கையாக செயற்படவில்லை என சில தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனினும்
இந்த பரவலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் கொவிட் நோயாளிகள் பதிவாகும் வீதம் 7.7% ஆக உயர்ந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.