துறைமுகத்தில் தரித்து நிற்கும் எரிபொருள் தாங்கிய கப்பலிலிருந்து எரிபொருளை பெற்றுக் கொள்ள தேவையான டொலர் இல்லாத காரணத்தினால் எரிபொருள் இறக்குமதியில் தாமதம் ஏற்பட்டுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலங்கை பணத்தினை வழங்கினால் மட்டுமே அதற்குரிய டொலரை வழங்க முடியுமென மத்திய வங்கி, தெரிவித்துள்ளது. இவ்வாறான இழுபறி நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஒன்று உருவாகியுள்ளது.
வங்கிகள் தமது பணபரிமாற்ற விலையின் அடிப்படையிலேயே டொலர்களை வழங்குகின்றன. தனி நபருக்கான டொலர் வரையறை உள்ளது போன்றே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும் வரையறுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
வலுசக்தி அமைச்சர் டொலர் இல்லாமையினால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
