யுக்ரைன் கிழக்கு பகுதியினை சுதந்திர பிரதேசமாக ரஷ்யா அறிவித்தது

யூக்ரைனின் கிழக்கு பகுதிகளான டொனெஸ்டெக் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை சுதந்திர பகுதிகளா ரஸ்சியா பிரகடனம் செய்துள்ளது. ரஸ்சியா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பை வெளியிடுவதாக ரஸ்சியா ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

யுக்ரைனின் கிழக்கு பகுதியினை 2014 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சிகாரகள் தங்களுக்கான பகுதியாக கோரி யுக்ரைன் இராணுவத்துடன் போராடி வருகின்றனர். ரஸ்சியா இந்த பகுதிக்குள் சென்று தாக்குதல்களை நடாத்தும் வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச செய்திகள் அண்மைக்காமலாக வெளியிடப்பட்டு வருகின்றன.

1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் பிரிக்கப்பட்ட போது, ரஸ்சியாவின் பாரம்பரிய நிலங்கள் களவாடப்பட்டதாகவும், அதன் பகுதிகளே தற்போதைய யுக்ரைன் எனவும் கருத்து வெளியிட்டுள்ள விளாடிமிர் புட்டின், யுக்ரைன் அமெரிக்கா அரசுக்கு உட்பட்ட காலனித்துவ அரசாங்கமாக செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

யுக்ரைனின் எல்லைக்குள் இதுவரை ரஸ்சியா இராணுவ துருப்புகள் செல்லவில்லை. இருப்பினும் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக்கள் வெளியிடபப்ட்டுள்ளன.

புட்டினின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா,பிரித்தானிய ஆகிய நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. ஒரு சுதந்திர நாட்டுக்குள் இவ்வாறு செயற்படுவது தவறானது எனவும் சுட்டிக் காட்டியுள்ளன.

குறித்த பகுதிக்குள் அமெரிக்கா பல முதலீட்டு திட்டங்களுக்காக ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடபிரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஸ்யா அதிபர் விளாடிமிர் புட்டின் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற தொலைபேசி மூலமான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது முக்கிய விடயமாகும்.

யுக்ரைன் கிழக்கு பகுதியினை சுதந்திர பிரதேசமாக ரஷ்யா அறிவித்தது

Social Share

Leave a Reply