யுக்ரைனுக்குள் புகுந்து தாக்குதல்

யுக்ரைனுக்குள் ரஸ்சியா இராணுவத்தினர் உட்புகுந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. வான் வெளியில் ஏவுகணை தாக்குதலுடன் தமது தாக்குதலை ஆரம்பித்த ரஸ்சியா, தரை வழியாக கிழக்கு உக்ரைன் பகுதிக்குள் நுழைந்து உக்ரைனின் முக்கிய பகுதிகளில் தாக்குதல்களை நடாத்துவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

யுக்ரைன், ரஸ்சியா மோதலில் 50 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. யுக்ரைன் படையினர் 40 ரஸ்சியா இராணுவத்தினரை கொண்டுள்ளதோடு, 5 இற்கு மேற்பட்ட விமானங்களை சுட்டு வீழ்த்தியுளளதாகவும் தெரிவித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன.

பொதுமக்கள் 10 பேருக்கு மேல் ரஸ்சியாவின் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாமெனவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏவுகணை மற்றும் எறிகணை தாக்குதல்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாமென சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஸ்சியாவின் தாக்கல் கடலிலிருந்தும், ரஸ்சியாவினுள் இருந்தும் ஏவுகணை மூலமாக ஆரபிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா இராணுவத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 80 இற்கும் மேற்பட்ட முக்கிய இடங்கள் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், யுக்ரைனின் முக்கிய இராணுவ நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

யுக்ரைனின் கிழக்கு பகுதிகளிலுள்ள மக்கள் தொடர்ந்தும் அந்த பகுதியினை விட்டு இடம்பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

யுக்ரைனுக்குள் புகுந்து தாக்குதல்

Social Share

Leave a Reply