வெற்றியோடு ஆரம்பித்த இந்தியா

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான 20-20 போட்டி தொடரை இந்தியா அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி இந்தியா லக்னோவில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா அணி 62 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இந்தியா அணி துடுப்பாட்டத்தில் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களை பெற்றது. இதில் இஷன் கிஷன் 89 (56) ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 57 (28) ஓட்டங்களையும், ரோஹதித் ஷர்மா 44 (32) ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார, டஸூன் சாணக்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றது. இதில் சரித் அசலங்க ஆட்டமிழக்கமால் 53 (47) ஓட்டங்களையும், சமிக்க கருணாரட்ன 21 (14), டுஸ்மாந்த சமீர ஆட்டமிழக்காமல் 24 (14 )ஓட்டங்களையும் பெற்றனர்.

இத்தியா அணியின் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகளடங்கிய தொடரின், இரண்டாவது போட்டி நாளை மறுதினம்(26.02) நடைபெறவுள்ளது.

வெற்றியோடு ஆரம்பித்த இந்தியா

Social Share

Leave a Reply