எரிவாயு சிலிண்டர்களோடு 3 கப்பல்கள் கடலில்

எரிவாயு தாங்கிகளோடு மூன்று கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு தரித்து நிற்கின்ற போதும் அவற்றிலுள்ள எரிவாயு சிலிண்டர்கள் இறக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வர்த்தக வங்கிகள் டொலர் நெருக்கடிக்கு முகம் கொடுப்பதனால், எரிவாயு இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு கடனுறுதி கடிதங்களை, வழங்காமையினால் எரிவாயுவைனை இறக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் லிட்ரோ எரிவாயு விநியோகமானது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் மூலமாக அறியமுடிகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மூலமாகவும், செய்தியாளர்கள் மூலமாகவும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதனை உறுதி செய்ய முடிகிறது.

எரிவாயு பற்றாக்குறையால் சுடுகாடு,தொழிற்சாலைகள் மற்றும் பெரிய அளவிலான ஹோட்டல்கள், பேக்கரிகளின் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல உணவகங்கள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. எரிவாயு பற்றாக்குறை காரணமாக சுமார் 1000 பேக்கறிகள் ஏற்கனவே தமது செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பேச்சாளர்தெரிவித்துள்ளார்.

எரிவாயு சிலிண்டர்களோடு 3 கப்பல்கள் கடலில்

Social Share

Leave a Reply