டீசல் இலங்கைக்கு வந்தடைந்துள்ள நிலையில் மின்தடை நேரம் குறைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் நேற்றைய தினம் 7 1/2 மணித்தியாலங்கள் மின் வெட்டு செய்யப்பட்ட பகுதிகளின் மின்வெட்டு நேரம் 3 மணித்தியாலங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மற்றைய பகுதிகளில் 3 1/4 மணித்தியால மின் வெட்டு அமுல் செய்யப்படவுள்ளது.
பொது சேவைகள் ஆணைக்குழுவின் அறிவித்தலின்படி நாளையதினம் A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய பகுதிகளில் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 2 1/2 மணித்தியாலங்கள் மின் தடை செய்யப்படும் அதேவேளை, மாலை 6.00மணி முதல் இரவு 11.00 மணிவரை’1 1/4 மணித்தியாலங்கள் மின் தடை செய்யப்படவுள்ளது.
P, Q, R, S, T, U, V, W பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையான நேரப்பகுதிகளில் 2 மணித்தியாலங்களும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான நேரப்பகுதியில் 1 மணித்தியாலமும் மின் தடை செய்யப்படவுள்ளது.
