ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (08.03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்வைத்த பொருளாதார மேம்பாட்டு வரைபு தொடர்பிலான சந்திப்பாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள 15 விடயங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , அமைச்சர்கள் பெசில் ராஜபக்ஷ ,தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன்
அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்கள் துமிந்த திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவண்ண, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கஜன் இராமநாதன், ஜகத் புஷ்பகுமார, சாந்த பண்டார, சாரதீ துஷ்மந்த, ஷான் விஜயலால் டி சில்வா, சாமர சம்பத் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
