ரணிலிடம் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய மாநாட்டில் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க கோபமடைந்தமைக்கு, ஜனாதிபதி தன்னுடைய மன்னிப்பினை கோரியுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர் தனது உரையில் “முன்னைய அரசாங்கத்தின் தவறுகளினாலேயே தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட காரணமென” கூறியதே அப்போதைய பிரதமர் ரணிலின் கோபத்துக்கு காரணமாக அமைந்தது.

“ஜனாதிபதியின் ஏற்பாட்டில், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அழைப்பில் தான் முந்தைய நட்பு காரணமாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், இந்த கூட்டம் தற்போதைய நெருக்கடி நிலை பற்றி பேசவே தவிர, பழைய கதைகளை கதைப்பதற்காக இல்லையென” தெரிவித்த ரணில், “இதற்கு நான் பதிலழித்தால், பழைய கதைகளை மீண்டும் கதைக்கும் நிலை ஏற்படும். இறுதியில் விஜய மன்னன் இலங்கைக்கு வந்தமையினாலேயே இந்த பிரச்சினைகள் வந்தன என்ற முடிவுக்கே வரவேண்டும்” என தனது உரையில் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி இறுதியாக உரையாற்றும் போது கப்ரால் கூறிய வார்த்தைகள் தங்களை காயப்படுத்தியிருந்தால் தான் மன்னிப்பு கோருவதாக தனது உரையில் தெரிவித்திருந்தார்.

ரணிலிடம் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி

Social Share

Leave a Reply