கொரோனா தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பது கட்டாயமாக்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு உயர்நீதிமன்றத்தில் ஒரு தனிப்பட்ட குழுவினால் குறித்த வர்த்தமானியை இரத்து செய்யக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கினை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வேளையில், நீதியரசர்கள் பிரியந்த ஜெயவர்தன, ப்ரீத்தி பட்மன் சுரசேன, காமினி அமரசேகர, குமுதினி விக்ரமசிங்க, ஷிரான் குணரட்ன ஆகியோரில் பெரும்பான்மையினர் இந்த முடிவினை எடுத்து தீர்ப்பினை அறிவித்துள்ளனர்.
சுகாதர அமைச்சர் கெஹலிய ரம்புக்வல, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே, பேராசிரியர் சன்ன ஜெயசுமன, சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் அசேல குணரட்ன, பொலிஸ் மா அதிபர் உட்பட மேலும் அறுவர் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
பொது இடங்களுக்கு செல்வதற்கும், பொது போக்குவரத்தை பாவிப்பதற்கும் தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டும் என்ற வர்த்தமானி வெளியிடப்பட்டது. அதனை எதிர்த்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
