சமூக ஊடகங்களை முடக்குவது பயனற்றது! விபிஎன் செயலியைப் பயன்படுத்தும் நாமல்

சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டது பயனற்ற ஒரு விடயம் என்று இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் விபிஎன் செயலி ஊடாக டுவிட்டர் தளத்தினை பயன்படுத்தி அவர் இந்தப் பதிவினை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சமூக ஊடகங்களை முடக்குவது பயனற்றது! விபிஎன் செயலியைப் பயன்படுத்தும் நாமல்

சமூக ஊடகங்களை முடக்குவதை நான் ஒருபோதும் மன்னிக்கமாட்டேன். நானும் இப்போது விபிஎன் செயலியையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஆகவே சமூக ஊடகங்களை முடக்குவது என்பது முற்றிலுமே பயனற்றதாகும்.

அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டது.

இலங்கையில் சமூக ஊடகங்கள் நேற்று இரவிலிருந்து முடக்கப்பட்டுள்ளது. தற்போது டுவிட்டர், வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயற்படவில்லை.

அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இன்றும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பிலான புகைப்படங்கள், காணொளிகளை பொது மக்கள் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் வெளியிட்டு அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் , இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச டுவிட்டர் கணக்கில் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

இலங்கை முழுவதும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு அது விதிவிலக்கா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, பதிவுசெய்யப்பட்ட ஊடகங்கள் போன்றவற்றுக்கும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றும் ஊடகங்கள் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளன.

சமூக ஊடகங்களை முடக்குவது பயனற்றது! விபிஎன் செயலியைப் பயன்படுத்தும் நாமல்

Social Share

Leave a Reply