நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை இலங்கை தனியார் போக்குவரத்து சங்கத்தின் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், டீசல் கிடைக்காவிட்டால் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகளை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தனியார் போக்குவரத்து சங்க தலைவர் கெமுனு விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
புதுவருட கொண்டாடங்களுக்காக தங்களது ஊர்களுக்கு செல்பவர்கள் கிடைக்கும் போக்குவரத்துக்கு வசதிகளை பாவித்துக்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் தேவையான முன் ஏற்பாடுகளை செய்துகொண்டு தங்கள் ஊர்களுக்கு சென்று புதுவருடத்தை நிம்மதியாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். இறுதி நேர மற்றும் திடீர் பயணங்கள் உங்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்பதனை மனதில் வைத்து செயற்படுங்கள்.
