நிபுணுத்துவ வலுவை வெளிநாடுகளுக்கு வழங்க பொருளாதாரம் மேம்படும்

நிபுணுத்துவம் பெற்ற அலுவலகர்களை வெளிநாடு செல்ல ஊக்குவிக்க வேண்டும். கூலி தொழிலார்கள் வெளிநாடு செல்வத்திலும் பார்க்க, சிறப்பு பாண்டித்துவம் உடைய ஊழியர்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்வதனால் அவர்களுக்கான அதிக வருமானம் கிடைக்கும் அதேவேளை நாட்டுக்கும் அந்நிய செலவாணி இலங்கைக்கு அதிகம் கிடைக்கும் என ஐ.டி.எம் நேஷன்ஸ் கம்பஸ் நிறுவனத்தின் தலைவர் ஜனகன் விநாயகமூர்த்தி அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருது வெளியிட்டுள்ளார்.

அந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனகன் தொடர்ந்து இவ்வாறு உரையாற்றியிருந்தார்.

சுற்றுலா, தேயிலை ஏற்றுமதி, ஆடை, புடவை, அரிசி உற்பத்தி மற்றும் ஏனைய விவசாயப் பொருட்கள் இலங்கையின் பிரதான பொருளாதாரத் துறைகளாகும். அவற்றில், சேவைத் துறையானது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 59.67 சதவிகிதம் பங்களிக்கிறது.

இந்த பொருளாதாரத் துறைகளுக்கு மேலதிகமாக, வெளிநாட்டு வேலை வாய்புகள் அந்நிய செலாவணியில் அதிக பங்களிபபை வழங்குகின்றன. புலம்பெயர்ந்த இலங்கையர்களில் 90 சதவீதமானவர்கள் மத்திய கிழக்கில் வசிக்கின்றனர். இவர்களில் அதிகளவிலானவர்கள், கூலித் தொழிலாளர்களாக வேலைக்கு இலங்கை ரூபாயில் சம்பளத்துக்காக வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள். இவர்களே அந்நியச் செலாவணியை அதிகம் ஈட்டி தந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியானது வெளிநாட்டில் பணிபுரியும் நாளாந்த கூலித் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த இலங்கையை சேர்ந்த நாளாந்த கூலித் தொழிலாளர்களுக்கு இது முன்னர் நடந்துள்ளது. சம்பளம் பொதுவாக இலங்கை ரூபாயில் ஒப்புக் கொள்ளப்படுவதாலும் பணவீக்கம் அதிகரிக்கும் போது அல்லது ரூபாவின் பெறுமதி குறையும் போது அவர்களின் வெளிநாட்டு சம்பளம் LKR இன் பெறுமதிக்கு ஏற்றவாறு குறைக்கப்படுவதாலும் பல ஊழியர்களுக்கு இந்த ஆபத்து உள்ளது. இந்தப் பிரச்சினை வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மூலம் பெறப்படும் அந்நியச் செலாவணி மற்றும் அதை நம்பியிருக்கும் நமது பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

தெற்காசியாவிலிருந்து புலம்பெயர்ந்த அலுவலக தொழிலாளர்கள் அந்தந்த நாட்டின் குடிமக்கள் அல்லது பிற வளர்ந்த நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை விட குறைவான சம்பளம் பெற்றாலும், நாளாந்த கூலித் தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் அலுவலக தொழிலாளர்களின் சம்பளம் குறைக்கப்படுவதில்லை.

எனவே, அண்மைய பொருளாதார நெருக்கடியானது, அறிவு சார்ந்த சமூக சந்தைப் பொருளாதாரத்தையும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அறிவுசார் பொருளாதாரத்தையும் உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு வாய்ப்பாக அமையும். ஆகவே நாளாந்த கூலித் தொழிலாளர்களை விட திறமையான நிபுணத்துவமிக்க அலுவலக ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்.

எந்தவொரு நாட்டின் வளர்ச்சியும் அதன் மனித மூலதனத்தைப் பொறுத்தது. அதேபோல, எந்தவொரு நிறுவனத்தின் வெற்றியும் அதன் திறமையான பணியாளர்களின் செயல்திறனைப் பொறுத்தது. இந்தத் தகுதிவாய்ந்த பணியாளர்களை இலங்கைக்கு வெளியே சில வருடங்கள் பணியமர்த்தி தற்காலிக ஏற்பாட்டுடன் மீண்டும் நாட்டிற்கு அழைத்துச் வர முடியுமா என்பதே கேள்வி.

அண்மைய காலங்களில், தகுதி வாய்ந்த நபர்களின் குடியேற்றத்திற்கான அடிப்படை சமூக-பொருளாதார பிரச்சனைகளை பிரதிபலிக்கிறது. இந்த சூழலில், இலங்கையில் அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காததால், வெளிநாடுகளில் நிபுணத்துவ தொழிலைத் தொடர விரும்பும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டிற்கு செல்லும் இளைஞர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பாத காரணத்தினால் இலங்கையில் தகுதி வாய்ந்த மனித வள பற்றாக்குறையை ஏற்பட்டு வருகிறது.

இலங்கை வெளி விவகார அமைச்சும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் இணைந்து வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களது ஒத்துழைப்போடு இலங்கையின் அலுவலக ஊழியர்களுக்கு 1 வருடம் முதல் 5 வருடங்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையர்களுக்கு ஒப்பந்த வேலைகளை வழங்குவதற்கும் சர்வதேச மட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அரசாங்கம் மேலும் பல தேசிய நிறுவனங்களை ஊக்குவிக்க முடியும். பொருத்தமான வேலை வாய்ப்புகள் மற்றும் சிறந்த வசதிகளை வழங்குவதன் மூலம் திறமையான ஊழியர்களை நாட்டிற்கு வெளியே அனுப்புவதற்கான உத்திகளை வகுப்பதில் கவனம் செலுத்துதல். ஒப்பந்த காலம் முடிவடைந்தவுடன் பணியமர்த்தப்பட்ட இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்ப அழைத்தல் போன்ற முயற்சிகளை அரசாங்கம் ஒழுங்கமைத்து அவ்வாறான வாய்ப்புகளை வழங்கினால், வெளிநாட்டில் சேவையாற்றி குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் இலங்கைக்குத் திரும்புவதற்கு பணியாளர்கள் விசுவாசமாக இருப்பார்கள்.

வெளிநாடுகளில் பணியமர்த்தப்பட்டதன் பின்னர், புலம்பெயர்ந்த இலங்கை தொழில் வல்லுநர்களுக்கு பொருத்தமான பதவிகள் மற்றும் வெளிநாட்டில் பெற்ற அல்லது அதற்க்கு ஈடான கவர்ச்சியான ஊதியங்களை வழங்குவதன் மூலம் நாட்டுக்கு அவர்களை மீண்டும் அழைக்க முடியும்.

“ஊதிய விடுப்பு இல்லை” என்று பணியாளர்களுக்கு வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்பை வழங்குவது, அலுவலக பணியாளர்களை நாட்டிற்கு வெளியே அனுப்புவதற்கான ஒரு திறமையான வழியாகும். எனவே, இந்தப் பாதையைப் பயன்படுத்துவதற்கு பணியாளர்களை உருவாக்கி நிர்வகிப்பது, நாட்டின் முக்கிய வருமானமான அந்நியச் செலாவணியை அதிகரிப்பதற்கான சிறந்த வழிமுறை.

தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் ஊழியர்களைக் குறைப்பதைத் தவிர்த்து, சர்வதேச தொழிலாளர் சந்தையில் அவர்களைபணிக்கு அமர்த்தி அவர்களுக்கான சிறந்த வருமானத்தை ஏற்படுத்தி, நாட்டுக்குமான . வருமானத்தையும் அதிகரிக்க செய்யலாம்.

இவ்வாறான செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கான ஒரு விசேட பணிக்குழு உருவாக்கப்பட்டு, அந்த குழு இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.

நிபுணுத்துவ வலுவை வெளிநாடுகளுக்கு வழங்க பொருளாதாரம் மேம்படும்

Social Share

Leave a Reply