இந்தியாவின் இலங்கைக்கான புதுவருட பரிசு

இந்தியா,இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியா அரசாங்க உயர் மட்டங்களில் இந்த விடயம் தொடர்பில் பேசபப்ட்டுவருவதாக சர்வதேச செய்தி முகவர் நிலையம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையின் மோசமான பொருளாதாரவீழ்ச்சிக்கு கை கொடுத்து இலங்கையை தூக்கி நிமிர்த்தி விடும் முனைப்போடும், சீனாவின் ஆதிக்கத்தினை இலங்கையில் குறைப்பதற்கும் இந்தியா இவ்வாறான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாஉணவுப் பொருட்களுக்கும், எரிபொருள் விநியோகத்துக்குமாக இந்த 2 பில்லியன்டொலர் பணத்தினை வழங்க தயார் செய்துவருகிறது. வழங்கப்படவுள்ள இந்த பணத்தின்மூலம் சில கடன்களை அரசாங்கம் மீள செலுத்த கூடிய ஏற்பாடுகளும் உள்ளதாக நம்பப்படுகிறது.

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் சந்திக்கும் பாரிய பொருளாதர வீழ்ச்சி. இந்த நிலையில் அயல் நாடான இந்தியா இலங்கைக்கு கைகொடுக்க வேண்டிய நேரமிது என பெயர் வெளியிடப்படாத உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இந்த விடயம் வெளியாகியுள்ளது.

சீனாவிடம் இலங்கை பெற்றுள்ள கடனில் 3.5 பில்லியன் டொலர்கள் மீள செலுத்த வேண்டிய நிலுவையிலுள்ளது. அதனை குறைத்து, இந்தியா இலங்கையின் முக்கியமான பங்குதாரராக மாறுவதற்கு முயற்சிப்பதாகவும் இந்தியா தரப்பு தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 2 பில்லியன் டொலர்கள் தொடர்பில் இந்திய அரசாங்கம், இந்திய மத்திய வங்கி மற்றும், இலங்கை வெளியுறவு துறை அமைச்சுகளுக்கிடையில் பேசப்பட்டு வருவதாகவும், அதனை உறுதி செய்ய முடியவில்லை எனவும் இந்த செய்தியினை வெளியிட்டுள்ள அந்த சர்வதேச செய்தி முகவர் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இலங்கைக்கான புதுவருட பரிசு

Social Share

Leave a Reply