ரம்புக்கணையில் ஊரடங்கு – துப்பாக்கி சூட்டு வீடியோ

ரம்புக்கணை பகுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரம்புக்கணை சம்பவம் தொடர்பில் காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“இன்று காலை முதல் வீதியினையும், புகையிரத கடவையினையும் மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மக்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தல்கள் பல வழங்கியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. அதனை தொடர்ந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் காவு வண்டியினை அப்புறப்படுத்த முயற்சி வேளையில், அந்த வண்டிக்கு தீயிட முயற்சித்த அதேவேளை, முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீயிட்டு சேதப்படுத்தினார்கள்.

பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது”

————————-

ரம்புக்கணையில் இரயில் பாதையை மறித்து போராட்டம் நடாத்தியவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

10 இற்கும் மேற்பட்டோர் இதுவரையில் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனன. இருப்பினும் சரியான தொகை இதுவரை வெளியிடப்படவில்லை.

எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக இன்று அதிகாலை முதல் ரம்புக்கனை புயகையிரத கடவையினை இடைமறித்து ரம்புக்கனை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரம்புக்கனை வைத்தியசாலையில் மக்கள் நிறைந்து காணபப்டுவதனால் பதட்ட சூழ்நிலை காணப்பபடுவதாகவும், ரம்புக்கனை பகுதியில் பதட்ட சூழல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் நால்வர் மோசமாக காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக சிகிச்சைகளுக்காக கேகாலை வைத்தியசாலையில் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரம்புக்கணையில் ஊரடங்கு - துப்பாக்கி சூட்டு வீடியோ

Social Share

Leave a Reply