ரம்புக்கணையில் நேற்றைய தினம் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் முச்சக்கர வண்டிக்கு காவற்துறையினர் தீயிட்டது வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளதாக பாரளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் காவல்துறையினரே முச்சக்கர வண்டியினை தீயிட்டு கொளுத்தினர் என்பதனை கூறிய பின்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ “வெளியாகியுள்ள வீடியோக்களில் முச்சக்கர வண்டிக்கு தீ மூட்டும் காட்சி, எரிபொருள் காவு வண்டிக்கு காற்றை திறந்து விடும் காட்சி, எரிபொருள் நிலையத்துக்கு தீ மூட்ட முயற்சிக்கும் காட்சி போன்றன வெளியாகியுள்ளன. சம்மந்தப்பட்ட அதிகாரிவுகளை பாராளுமன்றத்துக்கு அழைத்து, வீடியோ காட்சிகள் மற்றும் கண்காணிப்பு வீடியோ பதிவு காட்சிகள் போன்றவனற்றை ஆராய்ந்து இந்த பிரச்சினை தீர்க்க வேண்டும் என்ற ஆலோசனையை வழங்கினார்.
இல்லாதவிடத்து இந்த பிரச்சினையை இருவரும் மாற்றி குறை சொல்லிக்கொண்டே போக வேண்டி வரும். இந்த பிரச்சினைக்கு தீர்வும் வராது. இறந்தவருக்கு நீதியும் கிடைக்காதென” நாமல் மேலும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் சுயாதீன விசாரணை அவசியமென நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்திருந்தார்.
