இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கம் அமைக்க வேண்டும், 20 ஆம் திருத்த சட்ட அமுலாக்கம், நாட்டின் பொருளாதர சிக்கல்களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கைளை முன்வைத்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்திருந்தனர்.
அந்த கடிதத்துக்கு பதில் அனுப்பியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு பதில் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க தான் தயாராக இருப்பதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் வணக்கத்துக்குரிய மெதகம தம்மானந்த தேரர் உறுதி செய்துள்ளார்.
பாராளுமன்றத்தில் செய்யப்படும் அரசியலைப்பு சட்ட திருத்தம் எதுவாக இருந்தாலும் தான் ஆதரவு வழங்குவதாகவும் மேலும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
