ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கெதிராக 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் ஆளும் பொதுஜன பெரமுன அரசின் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில அரசாங்கம் விரைவில் பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணை உடனடியாக கையளிக்கப்படுமென தெரிவித்துள்ளார்.
பிரதான எதிர்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளதாகவும், அந்த கட்சிகளும் நம்பிக்கையில்லா பிரேரணையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
