ஜானதிபதியினை சந்திப்பது தொடர்பில் முடிவில்லை – சுதந்திர கட்சி

அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பதில் மீண்டும் களமிறங்கியுள்ள ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனான கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாளையதினம் இந்த சந்திப்புக்காக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஜனாதிபதியினை சந்திப்பதாக இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் அனைத்து கட்சிகளையும் இணைத்து அரசாங்கத்தை அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் மற்றும் அமைச்சரவை இராஜினாமா செய்ததன் பின்னரே புதிய அரசாங்கம், புதிய திட்டங்கள், அரச கட்டமைப்பு தொடர்பில் அனைத்து கட்சிகளுக்குமான கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள சுரேன் ராகவன் மற்றும் சாந்த பண்டார ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டாலே ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்த முயடியுமென்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்ச்சி காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தவிர அரசிலிருந்து விலகியுள்ள மற்றைய கட்சிகள் ஜனாதிபதியினை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜானதிபதியினை சந்திப்பது தொடர்பில் முடிவில்லை - சுதந்திர கட்சி

Social Share

Leave a Reply