ரம்புக்கணை சம்பவம் – சுட்ட பொலிஸாருக்கு ஒரே நேரத்தில் சுகயீனம்

ரம்புக்கணையில் போராட்டகாரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார் மற்றும் அதற்கு உத்தரவிட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபப்படுத்துமாறு கேகாலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்படவேண்டிய கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்திரட்ன வாந்தி வருவதாக கூறி கொழும்பு நாரஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கி பிரயோகத்தினை நடைமுறைப்படுத்திய குற்றம் சுமத்தப்பட்டுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்திரட்ண துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட மற்றைய பொலிஸார் உட்பட அறுவர் கண்டி குண்டசாலை வைத்தியலையில் வேறு வேறு சுகயீனங்களை கூறி அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் மே மாதம் 02 ஆம் திகதி நடைபெறவுள்ள விசாரணைகளின் போது முன்னிலை படுத்துமாறு கேகாலை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால், நீதிபதி அவர்களை வைத்தியசாலைக்கு சென்று கைது செய்ய வேண்டும். வேறு மாவட்டங்களில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் அந்த மாவட்ட நீதிபதிகளுக்கு அறிவித்து அவர்களை வைத்தியசாலையில் வைத்து கைது செய்ய வேண்டுமென வழக்கறிஞர்கள் சட்டம் தொடர்பில் தெரிவிக்கின்றனர்.

ரம்புக்கணை சம்பவம் - சுட்ட பொலிஸாருக்கு ஒரே நேரத்தில் சுகயீனம்

Social Share

Leave a Reply