வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் துமிந்த சில்வா கட்டுநாயக்க விமான நிலையையமூடாக வெளிநாடு செல்லும் புகைப்படமொன்று வெளியாகியுள்ளது.
கொலை குற்றத்துக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு சிறைவாசத்தினை நிறைவு செய்துகொண்டார்.
சிறையிலிருத்து வெளியே வந்தவருக்கு வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலை காரணமாகவும், அரச சார்பானவர்கள் நாடுமுழுவதும் தாக்கப்படுவதனால் துமிந்த சில்வாவும் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
