ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையில் இன்று(03.06) IPL இன் இறுதிப்போட்டியாக அஹமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 6 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 18 வருடங்களின் பின் முதலாவது IPL கிண்ணத்தை கைப்பற்றியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்றது. இதில் விராட் கோலி 43(35) ஓட்டங்களையும், ரஜாட் படிதர் 26(16) ஓட்டங்களையும், லியாம் லிவிங்ஸ்டன் 25(15) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அஷ்தீப் சிங், கைல் ஜேமிசன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷஷாங் சிங் ஆட்டமிழக்காமல் 61(30) ஓட்டங்களையும், ஜோஷ் இங்கிலிஷ் 39(23) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், க்ருனால் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.