ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் – சஜித்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஜானதிபதி கோட்டாபய ராஜபக் பதவி விலகவேண்டுமென்பதே மக்களின் கோரிக்கை. அதனை ஏற்றுக்கொண்டு உடனடியாக பதவி விலக வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின், வன்முறை மற்றும் அடக்குமுறை காரணமாக நாடு சீரழிந்தது எனவும், ஜனாதிபதி பதவி விலகாவிடின் எந்த பொறுப்புகளையும் பொறுப்பேற்க மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரச தீவிரவாதம் மூலம் அமைதியாக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நிலைமைக்கு பொலிஸ் மா அதிபரும் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் சஜித் மேலும் தெரிவித்தார்.

கொள்ளைக்காரர்கள், இனவாதிகள், சட்டத்தை மீறுபவர்கள், கொலைகாரர்கள் போன்றவர்களிடமிருந்து நாட்டை பாதுகாத்து, சமாதானத்தை ஏற்படுத்த வேண்டியது முப்படை மற்றும், பொலிஸ் மா அதிபரது கடமையெனவும், அவற்றை சரியாக நடைமுறைப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைதியாக போராட்டம் நடாத்துபவர்கள் மீது தாக்குதல் நடத்தாமல் பாதுகாக்குமாறும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார் .

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் - சஜித்

Social Share

Leave a Reply