“கோட்டா ஹோ கம” வை அகற்ற பொலிஸ் நடவடிக்கை?

கொழும்பு காலி முகத்திடலில் கோட்டா ஹம அமைத்து போராட்டம் நடாத்துபவர்களை அந்த இடத்தில் இருந்து கலைந்து செல்லுமாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னதாக உள்ள ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் அறிவிப்பு செய்துள்ளனர்.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் அதன் விதிமுறைகளாக “பொது இடங்களில் ஒன்று கூடுதல் தடை செய்யப்பட்டுள்ளது” என்பதனை அடிப்படையாக வைத்து இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கை இதுவென கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

"கோட்டா ஹோ கம" வை அகற்ற பொலிஸ் நடவடிக்கை?

Social Share

Leave a Reply