ரணில் வஞ்சைப் புகழ்ச்சி

பாராளுமன்றத்தில் தனியொருவராக இருந்து பிரதமராககியிருக்கும் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினை வஞ்சைப் புகழ்ச்சி செய்திருந்தார். அரசமைக்க உதவுமாறும், அனைவரும் சேர்ந்து செயற்பட்டு நாட்டை மீட்டெடுக்கவே வேண்டுமெனவும் அழைப்பினை விடுத்த பிரதமர் எதிர்கட்சியினை தாக்க ஆரம்பித்திருப்பது அனைவரும் இணைந்து செயற்பட முடியுமா என்ற கேள்வியினை உருவாக்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி என்னை ஓரம் கட்டுவதையே முழு நேரமாக சிந்தித்து கொண்டிருப்பதனால் அவர்கள் அண்மைய தாக்குதல் சம்பவங்களில் ஈடுப்பட்டிருக்கவோ, அல்லது அதன் பின்னணியிலோ இருக்கவோ முடியாதென கூறியிருந்தார். அத்தோடு நாட்டில் முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் இலங்கையின் கிராமிய வைத்தியசாலைகளில் இருதய நோய்க்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் மருத்துவ நிகழ்சி திட்டத்தினூடாக அதனை வழங்குமாறும் கோரியிருந்தார்.

தனியொருவராக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் உங்களை ஓரம் கட்ட நினைக்கவில்லை. இணைத்துக்கொண்டு செயற்படவே சிந்திக்கிறோம் எனவும், மருந்துகளை வழங்கும் உதவிகளை நாம் செய்வதில்லை, உயிர் காக்கும் உபகரணங்களை வழங்குகிறோம். இருந்தாலும் உங்களுக்கு தெரிந்த ஒரேயொரு மருந்தை கேட்டிருக்கிறீர்கள். அதனை வழங்க எங்களால் முடிந்ததை செய்கிறோம். ஆனால் முழு நாட்டுக்கும் வழங்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் பிரதமர் சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.

ரணில் வஞ்சைப் புகழ்ச்சி

Social Share

Leave a Reply