நாளைய தினம் அரச ஊழியர்கள் கடமைக்கு வரத்தேவையில்லை என பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய தேவையுடையோர் மட்டுமே கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாடே இதற்கு காரணம் .ஏற்கனவே நேற்றும் இன்றும் அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகமளித்தமை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. நாடு பூராகவும் வீதிகளில் வாகன போக்குவரத்தும் குறைவாகவே காணப்படுகின்றது.
