54,000 கோடி மக்கள் வங்கி கடன்கள் நிலுவையில்

54,000 கோடி ரூபா பெறுமதியான கடன்கள் மக்கள் வங்கியினால் அறவிடப்படாமல் காணப்படுவதாக பாராளுமன்ற பொது நிறுவன குழு(கோப்) தலைவர் கலாநிதி சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஒரு மாத காலத்துக்குள் கோப்பிற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென கோப் தலைவர்,மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த கடன்கள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டு, வழங்கப்பட்டுள்ளன என்பது தொடர்பிலும், இந்த கடன்களை வழங்கும் அனுமதியில் யாருடைய தலையீடுகள் உள்ளன என்பது தொடர்பிலும் விபரங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் கலாநிதி சரித்த ஹேரத் கூறியுள்ளார். அத்தோடு வழங்கப்படும் அறிக்கை அடுத்த கோப் குழு கூட்டத்தின் அறிக்கையில் சேர்க்கப்படுமெனவும் மேலும் கூறியுள்ளார்.

2018, 2019 மற்றும் தற்போதைய மக்கள் வங்கியின் நிலமை தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் இலங்கை கடன்களை தீர்க்க கூடிய இந்த பாரிய தொகை கடன்கள் செலுத்தப்படாத நிலையில் அல்லது நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையிலேயே பாராளுமன்றத்தில் நடைபெற்ற கோப் குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

54,000 கோடி மக்கள் வங்கி கடன்கள் நிலுவையில்

Social Share

Leave a Reply