இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரபாகரனும், அவரது குடும்பமுமே பதில் சொல்ல வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் S.P திசநாயக்க தெரிவித்துள்ளார். இறுதி கட்ட யுத்தத்தில் காணாமல் போனவர்களுக்கு நேர்ந்ததை அவர்கள் உறவினர்கள் நன்றாக அறிவார்கள். ஆனால் அவர்களை கண்டுபிடித்து தருமாறு தற்போது கோருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆயுதங்களை தூக்கி எறிந்து விட்டு இராணுவத்தினரிடம் சரணடைய வந்த விடுதலை புலிககளின் உறுப்பினர்களையும், சரணடைவதற்காக வந்த மக்களையும் அதிகம் கொன்றது விடுதலை புலிகளே என இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் S.P திசநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு ஆராயவில்லையெனவும் குற்றம் சாட்டியுள்ள S.P திசநாயக்க இலங்கையின் உள்ளக விவகாரத்தில் தலையிடும் அதிகாரம் மனித உரிமை பேரவைக்கும் அதன் ஆளுநருக்கும் இல்லை என தெரிவித்துள்ள அவர் நாட்டில் காணப்படும் பிரச்சினைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் சுயாதீனத்துக்கு ஏற்றவராகவும், பொது சட்டங்களுக்கு அமைவாகவும் உரிய தீர்மானங்களை மேற்கொள்வார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.