மனித உரிமை ஆணைக்குழு மஹிந்தவுக்கு அழைப்பு

மே 09 ஆம் திகதி காலிமுக திடல் மற்றும் அலரி மாளிகை முன்றலில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்தி, கலவரத்தை உருவாக்கியது தொடர்பிலான விசாரணைக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜூன் மாதம் 01 ஆம் திகதி விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார். மனித உரிமை ஆணைக் குழுவினால் நடாத்தப்படும் விசாரணைகளின் அடுத்த கட்டமாக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரமேஷ் பத்திரன, பாரளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேயகுணவர்தன ஆகியோரும் அதே தினத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் மற்றும் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட உதவி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரை மீண்டும் எதிர்வரும் இரண்டாம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டரேக்க சிறைச்சாலை கைதிகளை கலவரங்களில் ஈடுபடுத்தியமை தொடர்பிலான விசாரணைகளுக்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் அவன்கார்ட் நிறுவன தலைவர் நிசங்க சேனாதிபதி ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன.

மனித உரிமை ஆணைக்குழு மஹிந்தவுக்கு அழைப்பு

Social Share

Leave a Reply