தரம் 05 இற்கு கீழ் பாடசாலை ஆரம்பித்ற்கான திட்டங்கள் கையளிப்பு

200 மாணர்வகளுக்கு உட்பட்ட பாடசலைகளில், தரம் 05 மற்றும் தரம் 05 இன் கீழுள்ள வகுப்புகளை மீண்டும் ஆரம்பித்தல் தொடர்பான சுகாதர பிரிவினரின் வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிக்கை, கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பாக பாடசாலையில் எவ்வாறு நடந்து கொள்வது, பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் எவ்வாறு செயற்படுவது போன்ற முக்கிய விடயங்கள் அடங்கிய அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக சுகாதர திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


வரும் ஒக்டோபர் மாதம் மீண்டும் 200 மாணர்வகளுக்கு உட்பட்ட பாடசலைகளில், தரம் 05 மற்றும் தரம் 05 இன் கீழுள்ள வகுப்புகளை மீண்டும் ஆரம்பிப்பது என திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கையளிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் செயற்பாட்டு நடவடிக்களுக்கான கால அளவில், ஆரம்பிக்கும் திகதி தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

தரம் 05 இற்கு கீழ் பாடசாலை ஆரம்பித்ற்கான திட்டங்கள் கையளிப்பு

Social Share

Leave a Reply