கைது செய்ப்பட்ட போராட்ட நபர் பிணையில் விடுதலை

இன்று பிற்பகல், கொம்பனி தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட கோட்ட கம போராட்டகாரர்களில் முக்கியமான ஒருவரான ரத்திந்து சுரமய பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

————————

முந்திய செய்தி

கோட்டா கோ கம போராட்டக்காரர்களில் முக்கியமான பங்கு வகிக்கும் ஒருவரான ரட்டா என அழைக்கப்படும் ரத்திந்து சுரமய இன்று கொம்பனித்தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் பெறுவதற்கென அழைக்கப்பட்டவர், கடந்த 25 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு முன்னாள் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பொலிஸாரின் பணிகளுக்கு இடையூறு செய்தமை, மற்றும் சட்ட விரோதமாக கூட்டம் கூட்டியமை ஆகியவை உள்ளிடட காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபடும் சக போராட்ட காரர்களும் பொலிஸ் நிலையத்துக்கு சென்ற அதேவேளை “போராட்டங்கள் தொடரும்” என்ற கோஷங்களை எழுப்பினர். அத்தோடு கைதுகள் இடம்பெற்றாலும் போராட்டங்கள் தொடரும் எனவும் கூறினர்.

ரட்டா, சமூக வலைத்தளம் மற்றும் யு டியூப் செயற்பாட்டாளர்.

கைது செய்ப்பட்ட போராட்ட நபர் பிணையில் விடுதலை

Social Share

Leave a Reply