ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களான நிமல் ஸ்ரீபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையிலிருத்து நீக்கப்படவுள்ளதாக கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் மைத்திரிபால சிரிசேன அறிவித்துள்ளார்.
கட்சியின் முடிவுகளை மீறி செயற்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென இருவரும் பதவி பிரமாணம் செய்து கொண்ட வேளையில் அறிவிக்கப்பட்டது. அதன் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கட்சியின் மத்திய குழு கூடவிலையெனவும், அவ்வாறு கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்க முடியாது எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதற்கான ஒரு நடைமுறையுள்ளது. அதன் பிரகாரமே உறுப்புரிமையிலிருந்து நீக்க முடியுமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
