இன்று அரச அலுவலங்கள் இயங்கவில்லை. செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமைகளில் அரச அலுவலங்களை திறப்பதில்லை என்ற அறிவிப்பு பொது சேவைகள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் மட்டுமே நடைபெறும்.
இன்று அரச அலுவலகங்களுக்கு செலவதனால் மக்கள் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாது. வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை என்ற தகவல் வெளியாகியிருந்தாலும், முதல் வாரத்தித்தின் வெள்ளிக்கிழமை என்ற அறிவிப்பும் குழப்ப நிலையினை தோற்றியுள்ளது. எவ்வாறு இருப்பினும் இன்று(03.06) அரச அலுவலகங்கள் இயங்கவில்லை.
வங்கிகளது செயற்பாடுகள் வழமை போன்றே இடம்பெறுகின்றன. அரச வங்கிகளும் இயங்குகின்றன.
