இலங்கையில் “பைஸர்” பூஸ்டர் ஊசிகள் விரைவில்

இலங்கையில் பூஸ்டர் ஊசிகள் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அறிய முடிகிறது. இரண்டு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றியவர்களுக்கு பூஸ்டர் ஊசிகள் மூன்றாவது ஊசியாக வெளிநாடுகளில் ஏற்றப்படுகின்றன. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை இந்த பூஸ்டர் ஊசிகள் ஏற்படுத்தும் என்றே வைத்திய நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

இலங்கையிலும் இந்த பூஸ்டர் தடுப்பூசிகள் ஏற்ற தயாராக இருப்பதாகவும், இரண்டாவது ஊசிகள் ஏற்றப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், மூன்றாவது ஊசிக்கு போனால் குழப்ப நிலை ஏற்படும். இரண்டாவது ஊசிகள் ஏற்றி முடிந்ததும் பூஸ்டர் ஊசிகள் ஏற்றப்பபடுமென இலங்கை அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

முதல் ஊசி ஏற்றப்பட்ட காலத்திலிருந்து, 6 மாதத்துக்கு பின்னர் மூன்றாவது பூஸ்டர் ஊசிகளை ஏற்ற முடியுமென சுகாதரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மே மாதத்தில் ஊசிகள் ஏற்ற ஆரம்பிக்கப்பட்டன. ஆகவே”தற்போது அதற்கான காலம் அண்மித்து வருகிறது. இந்த நிலையில் மூன்றாம் கட்ட ஊசிகள் ஒக்டோபர் மாதமளவில் வழங்கப்பபடும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் ஊசிகளாக பைஸர் ஊசிகளே வழங்கப்படுமெனவும், அதற்கான 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் முற்பணம் செலுத்தபப்ட்டுள்ளதாகவும், ஒக்டோபர் மாத இறுதியில் அவை எமக்கும் கிடைக்கும் என தெரிவித்த அவர், 8 இலட்சம் பைஸர் ஊசிகள் அமெரிக்காவின் உதவியினூடாக கிடைக்க இருப்பதாகவும் தெரிவித்தார். சுகாதர துறை ஊழியர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குமே முதலில் பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

இந்த திட்டத்தினை எவ்வாறு செயற்படுத்துவது மற்றும் வழங்குவது தொடர்பில் இன்னமும் முழுமையான திட்டங்கள் முடியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் "பைஸர்" பூஸ்டர் ஊசிகள் விரைவில்

Social Share

Leave a Reply