பிரதமர் ஊடகவியலாளராக செயற்படுகிறரார் – உதயா MP

நாட்டு மக்கள் – வீட்டுக்கு அனுப்ப துடிதுடித்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதியும் – ஏற்கனவே தேர்தல் மூலம் நிராகரித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரதமரும் இணைந்து நாட்டை மேலும் சிக்கலுக்குள் தள்ளி வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.

நமது நாடு நாளுக்கு நாள் பொருளாதார ரீதியில் மேலும் மேலும் வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தற்போதய பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை மீட்டெடுப்பார் என கூறி ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமாராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மீட்பவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் ஒரு ஊடகவியலாளர் போன்று நாட்டு மக்களுக்கு பிரச்சினைகளை கூறி – தகவல்களை மாத்திரமே வழங்கி வருகிறார் என உதயகுமார் பாராளுமன்றத்தில் இன்று(08.06) தனது உரையில் தெரிவித்தார்.

“வெறுமனே பிரச்சினைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பதை தவிர்த்து,அதற்கான உடனடி தீர்வுகளை தான் நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பிரச்சனை உக்கிரமடைந்து, நிலைமை மோசமாவதற்கு முன்பு பட்டினிச்சாவை எதிர் கொண்டுள்ள நாட்டு மக்களை அதிலிருந்து மீட்டு நிலையான தீர்வை வழங்க வேண்டும்.

முன்னர், அமெரிக்க பிரஜைகளும் ஒரு குடும்பத்தை சேர்ந்த பலரும் நாட்டை கொள்ளையடித்து நாட்டினுடைய பொருளாதாரத்தை படுபாதாளத்தில் தள்ளினர் என உதயகுமார் MP குற்றம் சுமத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமாரின் உரை கீழுள்ளது.

புதிய பிரதமர் பதவி ஏற்ற பின்னர் நாட்டில் ஏற்கனவே காணப்பட்ட வரிசைகள் இரட்டிப்பு அடைந்துள்ளன. முன்னர் நாட்டுமக்கள் பெட்ரோல், டீசல், கேஸ், மண்ணெண்ணெய் போன்றவற்றிற்கு வரிசையில் நின்றனர் மேலும், தற்போது இந்த பொருட்களை பெற்றுக் கொள்வதற்கும், முற்பதிவு செய்வதற்கும், மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று, தற்போது வெளிநாடு செல்ல வெளிநாட்டு வேலை வாய்ப்பு திணைக்களம் மற்றும் குடிவரவு திணைக்களத்தில் மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.

உதாரணமாக, ஒரு குடும்பத்தில் தந்தை பெட்ரோல் டீசல் வரிசையிலும் – தாய் மண்ணெண்னை வரிசையிலும் – மகள் கேஸ் வரிசையிலும் – மகன் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு செல்லும் வரிசையிலும் நிற்கின்றனர். சிலரது வாழ்க்கை வரிசையிலேயே முடிவடைகிறது இவ்வாறு வரிசைகளில் நின்று இதுவரை பத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக, பெருந்தோட்டதுறையில் பயிரிடப்படாத சுமார் 9000 ஹெக்டயார் காணிகள் பெருந்தோட்ட மலையக இளைஞர் யுவதிகளுக்கு பிரித்து கொடுப்பதன் மூலம் விவசாயம், பயர்செய்கை, கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு கைத்தொழில் போன்றவற்றில ஈடுப்படுவதன் மூலம் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்தி உணவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

இன்று பல்வேறு வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளன. சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் மூடப்படும் அபாயம் எற்பட்டுள்ளது. பல ஹோட்டல்கள், பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தொழிலின்மை அதிகரித்துள்ளது

நாட்டு மக்கள் தங்களுடைய நாளாந்த மூன்று வேளை உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலையில் இரண்டு வேளை உணவு உண்ண வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அதற்கு பழகி கொள்ள வேண்டும் என கூற ஒரு பிரதமர் தேவையா?

பிரதமர் ஊடகவியலாளராக செயற்படுகிறரார் - உதயா MP

Social Share

Leave a Reply