அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நேரப்பபடி அதிகாலை 4.45 அளவில் முதலாவது நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. விக்டோரியா மாநிலத்தில் முதலாவது நில நடுக்கம் ஏற்பட்டது. இது 5.8 அளவாக கணிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்த்து 4 மற்றும் 3.1 ஆகிய அளவுகளிலும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ், தென் அவுஸ்திரேலியா ஆகிய இடங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள போதும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அது நல்ல விடயம் என அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட மொரிசன் தெரிவித்துள்ளார்.
விக்டோரியா மாநிலத்தில் உள்ளவர்களை தெடர்ந்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்தின் பின்னர் கட்டிடங்களில் ஏற்படும் சேதம் தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மேட்டுமே வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுளளது.